220. வடுகூர்நாதர் கோயில்
இறைவன் வடுகூர்நாதர்
இறைவி வடுவகிர்கண்ணியம்மை
தீர்த்தம் வாமதேவ தீர்த்தம்
தல விருட்சம் வன்னி
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருவடுகூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருவண்டார் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சென்றால் பாண்டி எல்லை வாயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இடதுபுறம் சாலையில் சென்று கோயிலை அடையலாம். இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகம் எதிரில் உள்ளது. விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ள சின்னபாபு சமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thiruvandarkoil Gopuramஅஷ்ட பைரவர்களுள் ஒருவரான வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பாவம் தீர பூசித்த தலமாதலால் இப்பெயர் பெற்றது. ஆண்டவனார் கோயில் என்பது 'திரு' என்னும் அடைமொழி சேர்ந்து, காலப்போக்கில் 'திருவண்டார் கோயில்' என்று மாறியது.

சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 9994190417.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com